சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரலாக 4 பேர் புதிதாக நியமனம் ஏற்கனவே இருந்த 5 பேருக்கு பணி நீட்டிப்பு
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரலாக 4 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரலாக 4 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி வந்த 5 பேருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டுக்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பி.எச்.அரவிந்த்பாண்டியன், நர்மதா சம்பத், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோரும், மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு கே.செல்லப்பாண்டியனும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியில் இருந்து வந்த வி.எஸ்.சேதுராமன், சி.மணிசங்கர், எஸ்.டி.எஸ்.மூர்த்தி ஆகியோருக்கும், மதுரை கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்து வந்த பி.புகழேந்திக்கும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்து வந்த சுப்பிரமணியம் பிரசாத்தும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பி.எச்.அரவிந்த்பாண்டியன், முன்னாள் சபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகியுமான பி.எச்.பாண்டியனின் மூத்த மகன் ஆவார். அவரது தாயார் சிந்தியாபாண்டியன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆவார். பி.எச்.அரவிந்த்பாண்டியனுக்கு வயது 47. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். கம்பெனி மற்றும் வரி தொடர்பான சட்டங்களில் புலமைத்துவம் பெற்ற இவர், 23 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறார். தற்போது மூத்த வக்கீலாக இருந்து வருகிறார்.
வருமான வரி சட்டத்தில் சிறந்து விளங்கிய மறைந்த கே.ஆர்.ராமாமணி நடத்தி வந்த சுப்பராய அய்யர் பத்மநாபன் மற்றும் ராமாமணி சட்ட நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்தார். பல்வேறு சட்டப்புத்தகங்களை எழுதி உள்ளார். தேசிய சட்டப்பள்ளியின் நிர்வாகக்கவுன்சில் உறுப்பினராக தமிழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டு பணியாற்றி உள்ளார்.
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி கல்விக்கவுன்சில் செனட் உறுப்பினராகவும், ரெவின்யூ வக்கீல்கள் சங்கத்தின் செயலாளர், பொருளாளராகவும் இருந்துள்ளார். இந்த சங்கத்தில் தற்போது தலைவராக பணியாற்றி வருகிறார்.
இவர், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை 4½ ஆண்டுகள் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி உள்ளார். அந்த சமயத்தில் அரசுக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி அரசுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் நர்மதாசம்பத்துக்கு வயது 43. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், கடந்த 18 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறார். சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி தேசிய சட்டப்பள்ளி ஆகியவற்றின் வக்கீலாக நியமிக்கப்பட்டு பணியாற்றி உள்ளார். தற்போது வரை சென்னை ஐகோர்ட்டில் சிறப்பு அரசு வக்கீலாக(வரி தொடர்பான வழக்குகள்) பணியாற்றி வந்தார்.
வருமான வரி தொடர்பான வழக்குகளிலும், தேர்தல் ஆணைய விவகாரம் தொடர்பான வழக்குகளிலும் தமிழக அரசுக்காக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி உள்ளார். பல்வேறு சட்டப்புத்தகங்களில் சட்டம் தொடர்பான கட்டுரைகள் எழுதி உள்ளார்.
எஸ்.ஆர்.ராஜகோபால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறார். அகில இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் ஆகியவற்றுக்காக சென்னை ஐகோர்ட்டில் ஆஜராக கடந்த 2012-ம் ஆண்டு வக்கீலாக நியமிக்கப்பட்டு தற்போது வரை பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த மூத்த வக்கீல் கே.செல்லப்பாண்டியன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி ஆவார். அவருக்கு வயது 69. இவர், 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை மதுரை ஐகோர்ட்டு கிளையில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீலாகவும், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மதுரை ஐகோர்ட்டு கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றி உள்ளார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த இவர், கடந்த 44 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறார். பிரபல குற்றவியல் வக்கீலான இவர், பல்வேறு முக்கிய குற்ற வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.