திருவண்ணாமலையில் வேன் மீது லாரி மோதல்; 3 பேர் பலி
திருவண்ணாமலையில் செங்கம் அடுத்த தண்டம்பட்டு பகுதியில் வேன் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் செங்கம் அடுத்த தண்டம்பட்டு பகுதியில் வேன் ஒன்றின் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயம் அடைந்த 10க்கும் கூடுதலானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.