வி.ஏ.ஓ. மற்றும் குரூப்-4 தேர்வு ஒரு பணிக்கு 222 பேர் வீதம் விண்ணப்பம்
கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப்-4 தேர்வுக்கு ஒரு காலிப்பணியிடத்துக்கு 222 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை,
அரசு பணியாளர் தேர்வாணையம் 9,351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 13 கடைசி நாளாக அறிவித்தது. ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 20-ந்தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.
தேர்வுக் கட்டணம் செலுத்தவும் நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வுக்கு மொத்தம் சுமார் 20 லட்சத்து 83 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11 லட்சத்து 34 ஆயிரம் பேர் பெண்கள். 54 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். தேர்வாணைய வரலாற்றிலேயே குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு அதிகமானோர் விண்ணப்பித்தது இந்த தேர்வுக்கு தான். நீட்டிக்கப்பட்ட காலத்தில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்து 40 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
9,351 காலிப்பணியிடங்களுக்கு 20 லட்சத்து 83 ஆயிரம் பேர் என்றால் ஒரு பணிக்கு 222 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்று தேர்வாணைய இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.