பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் வாக்கு பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் பழுது: சரிசெய்யும் பணியில் அதிகாரிகள்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு பதிவிற்காக பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதடைந்துள்ளது.
ஆர்.கே. நகர்,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு பதிவிற்காக பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதடைந்துள்ளது.
மாதிரி வாக்கு பதிவு சோதனையின்பொழுது, வாக்கு பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் பழுது அடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.