உயிருடன் இருப்பவர்கள் படத்துடன் ‘பேனர்’ வைக்க தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
உயிருடன் இருப்பவர்களின் படத்துடன் ‘பேனர்’ வைக்க தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
உயிருடன் இருப்பவர்களுக்கு ‘பேனர்’, ‘கட்-அவுட்’, விளம்பர பலகைகள் உள்ளிட்ட வைகளை வைக்கக்கூடாது. போஸ்டர் அடிக்கக்கூடாது என்று ஒரு வழக்கில், ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவில், ‘பேனர்களில் உயிருடன் உள்ளவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது’ என்ற பகுதியை மட்டும் நீக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல்முறையீட்டு மனுவில், உயிருடன் இருப்பவர்களுக்கு விளம்பர பலகை வைக்கக்கூடாது. இறந்தவர்களுக்கு மட்டும் தான் வைக்க வேண்டும் என்ற உத்தரவினால், விளம்பர பலகைகள் மூலம் மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வருமானத்தை மட்டும் பார்க்கக்கூடாது. இந்த விளம்பர பலகைகள் பொது இடங்களில் வைப்பதால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சிக்கு அறிவுரை வழங்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார்.
அவர் தன் வாதத்தில், உயிரோடு இருப்பவர்களுக்கு ‘பேனர்’, ‘கட்-அவுட்’ உள்ளிட்ட விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது என்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் உத்தரவால், வணிக ரீதியான விளம்பரங்களை கூட வைக்க முடியவில்லை. விதிகளை மீறி ‘பேனர்’ வைப்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் உள்ள ‘உயிரோடு இருப்பவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது’ என்ற பகுதியை மட்டும் நீக்கவேண்டும் என கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
‘பேனர், கட்-அவுட்’ ஆகியவற்றில் ஆபாச படங்கள் மற்றும் கருத்துகள் இடம் பெறக்கூடாது என்று தான் விதிகளில் உள்ளது. படங்கள் இடம் பெறக்கூடாது என விதிகள் இல்லை. பேனர் தொடர்பான விதிகளை முறையாக அமல் படுத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அரசு முழுமையாக எதிர்க்கவில்லை. உயிருடன் இருப்பவர்களின் படங்கள் இடம் பெறக்கூடாது என்ற பகுதியை தான் எதிர்க்கிறது. உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றால் தான் விளம்பரங்களும் உயிரோட்டம் உள்ளவையாக இருக்கும்.
எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘உயிருடன் இருப்பவர்களின் படங்கள் இடம் பெறக் கூடாது’ என்ற பகுதியை மட்டும் ரத்து செய்கிறோம். அதேநேரம் விதிகளை மீறி வைக்கப்படும் இதுபோன்ற விளம்பர பலகைகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் உயிருடன் இருப்பவர்கள் படத்துடன் பேனர் வைக்க விதிக்கப்பட்ட தடை நீங்கியுள்ளது.