சேலத்தில் கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
கவர்னர் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அங்கு ஆய்வு செய்வதுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் என்று கவர்னர் அறிவித்தார். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை சேலத்திற்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
கவர்னரின் இந்த ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ் தலைமையில் தி.மு.க.வினர் பலர் கைகளில் கருப்புக்கொடியுடன் திரண்டு வந்தனர்.
தி.மு.க.வினருக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கையில் கருப்புக்கொடியை ஏந்தி வந்தனர். அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது கவர்னரின் வருகைக்கும் மற்றும் ஆய்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.