ஆணவ கொலை வழக்கில் முதல் முறையாக 6 பேருக்கு தூக்கு

சாதி ஆணவ கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது இந்தியாவிலேயே இது முதல் தீர்ப்பாகும்.

Update: 2017-12-12 23:11 GMT
திருப்பூர்,

உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வக்கீல் சங்கரநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டாலும், தனியாக இருப்பவரை கொலை செய்தாலும், யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டாலும், கூலிப்படையை ஏவி ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதுபோன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பேரில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் குற்றம்சாட்டப்பட்டதால் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசின் அனுமதியை பெற்று மேல்முறையீடு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்