சென்னை மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி முற்றிலும் நிறைவு
மேதின பூங்கா-தேனாம்பேட்டை இடையிலான சுரங்கம் தோண்டும் பணி நேற்று நிறைவுற்றதை அடுத்து, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும் பணி முற்றிலும் முடிவடைந்தது.
சென்னை
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக விமானநிலையம் முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை (33 கிலோ மீட்டர்) முதல் வழித்தடமும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை (22 கி.மீ) 2-வது வழித்தடமும் உருவாக்கப்பட்டது.
இதில் 2-வது வழித்தடத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி மெட்ரோ ரெயில் ஓடத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து முதல் வழித்தடத்தில் சின்னமலை முதல் விமான நிலையம் வரையும் (9 கி.மீ), 2-வது வழித்தடத்தில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையும் (7.4 கி.மீ) மெட்ரோ ரெயில் ஓடத்தொடங்கியது. மற்ற இடங்களில் சுரங்கப்பாதை தோண்டும் பணிகளும், இருப்புப்பாதை அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வந்தன.
நேற்றுடன் நிறைவு
மே தின பூங்கா-தேனாம்பேட்டை இடையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணியை தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் சுரங்கம் தோண்டும் பணி ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன. மே தின பூங்கா பகுதியில் 2013-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது.
கடுமையான பாறைகள் இருந்ததால் இந்த பணியை மேற்கொண்டுவந்த ரஷிய நிறுவனம் 2015-ம் ஆண்டு மே மாதம் பணியை தொடராமல் இடையில் விட்டுச்சென்றது. 13 மாதங்கள் கிடப்பில் போடப்பட்ட பணியை, இந்தியாவை சேர்ந்த ‘ஆப்கான்-இன்பராஸ்டிரக்சர்’ நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு 18 மாதங்களுக்கு பின் நேற்று வெற்றிகரமாக தனது பணியை தேனாம்பேட்டை சுரங்க ரெயில் நிலையத்தில் நிறைவு செய்தது.
முற்றிலும் முடிந்தது
இதன்மூலம் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும் பணி முற்றிலும் முடிவடைந்துள்ளதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணியில் 12 எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதுவரை 32 சுரங்கப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நேற்று நிறைவடைந்த பணியின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை- கொருக்குப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான சுரங்கப்பாதை முற்றிலும் நிறைவடைந்துள்ளதுடன், மொத்தத்தில் சுரங்கப்பாதையில் 44 பிரிவுகளுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
அடுத்தகட்ட பணிகள்
சுரங்கம் தோண்டும் பணி முடிவடைந்துள்ளதால், இனி அடுத்தகட்டமாக தேனாம்பேட்டை சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்பகுதியை அடைக்கும் பணி, சேறுகளை அகற்றும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.
அதன்பின்னர், இருப்புப்பாதை அமைத்தல், மின்சார வசதி செய்தல், சிக்னல்கள் அமைத்தல் போன்ற பணிகளை செய்வதற்கு தேவையான ஒப்புதல்கள் பெறப்பட்டு அடுத்தகட்ட பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சவாலான பணி
சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட ‘ஆப்கான்-இன்பராஸ்டிரக்சர்’ நிறுவன கண்காணிப்பாளர்கள் பாலு, பூமிநாதன் ஆகியோர் கூறியதாவது:-
ரஷிய நிறுவனம் பாதியில் விட்டுச்சென்ற இந்த பணியை நாங்கள் சவாலாக எடுத்து செய்தோம். அவர்கள் விட்டுச் சென்றதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து பணிகளை மேற்கொள்ளவே சிறிது காலம் ஆனது. நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த பணி எங்களுக்கு சற்று சிரமமாகவே இருந்தது. சில இடங்களில் மண்ணின் தன்மை மிருதுவாக இருக்கும், திடீரென கடின பாறைகள் வந்துவிடும்.
இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரு ஷிப்டுக்கு 20 பணியாளர்கள் வீதம், 2 ஷிப்டுகளில் மொத்தம் 40 பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை முடிக்க சுமார் 1½ ஆண்டு காலம் ஆகி உள்ளது.