ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு இடையூறாக தெருக்களில் நாற்காலி போட்டு அமரும் கட்சியினர் மீது நடவடிக்கை
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு இடையூறாக தெருக்களில் நாற்காலி போட்டு பிரசாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்துக்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர். பிரசாரம் இல்லாத நேரத்தில் அவர்கள் தெருக்கள், சந்துக்களில் நாற்காலி போட்டு அமர்ந்து இளைப்பாறுவதால், தொகுதி மக்களின் இயல்புவாழ்க்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் நாற்காலி போட்டு அமர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெளி தொகுதி வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் வாகனங்களுக்கு நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
வெளி தொகுதி வாகனங்கள் ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற்று கொள்ள வேண்டும். இதுவரை 95 வெளி தொகுதி வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் முறையான அனுமதி இல்லாமல் வந்த 65 வெளி மாவட்ட வாகனங்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு, தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே வெளியூர் வாகனங்களை பிரசாரத்திற்கு அனுமதியின்றி கொண்டு வர வேண்டாம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வெளியூர் மக்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. எனவே தெருக்களிலும், பொது இடங்களிலும் நாற்காலிகள் போட்டு அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கட்சியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமண மண்டபங்களில் அனுமதியின்றி தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும். தற்போது போலீசார் உதவியுடன் திருமண மண்டபங்களில் சோதனை நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இன்று(நேற்று) வாக்கு எந்திரம் தேர்ந்தெடுக்கும் பணி தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெறவில்லை. நாளை(இன்று) காலை வாக்கு எந்திரங்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.