டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

போடி அருகே டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2017-12-09 22:24 GMT
போடி,

போடி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி கொசு உற்பத்தியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போடி ஊராட்சி ஒன்றியத்தில் கொட்டக்குடி மலைக்கிராமம் உள்ளது. இங்குள்ள குரங் கணி கிராமத்தில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். சாம்பலாறு தடுப்பணையில் இருந்து கொட்டக் குடி ஆறு தொடங்கி போடி வழியாக தேனி சென்று வைகை அணையில் சேருகிறது. இந்த மலைக்கிராமத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இந்த கிராமத்தை சேர்ந்த தங்கப்பன் (வயது 62), மணிகண்டன் மகன் மதி (23) உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் தேனி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பலருக்கும் காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது மலைப்பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். கிராமம் முழுவதும் குப்பைகளை சரிவர அள்ளாமலும், சாக்கடைகள் தூர்வாரப்படாமலும் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த கொசுக்கள் பகல் மற்றும் இரவு முழுவதும் பொதுமக்களை கடிப்பதால் பலவிதமான தொற்றுகள் பரவி வருகிறது.

இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருந்துகள் இருப்பில் இல்லாததால் தடுப்பு நடவடிக்கை சரியாக எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சுகாதாரம் குறித்து கொட்டக்குடி பஞ்சாயத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. எனவே சுகாதாரத்துறையினர் போர்க் கால அடிப்படையில் மலைக்கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தி தடுப்பு நடவடிக்கை எடுத்து டெங்கு பரவுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்