மோடி ஆட்சியில் ஊழலில் முதல் இடத்தில் இருக்கிறோம் அன்னா ஹசாரே பேட்டி
மோடி ஆட்சியில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது என்று, அன்னா ஹசாரே தெரிவித்தார்.
மதுரை,
காங்கிரஸ் ஆட்சியில் ஊழலில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது மோடி ஆட்சியில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது என்று, அன்னா ஹசாரே தெரிவித்தார்.
தமிழக ஆறுகளின் வளம், மீட்பு உத்திகள் பற்றி திட்டமிடவும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் பற்றி ஆராயும் வகையிலும் தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் இன்று (ஞாயிறு) நடக்கிறது. இந்த கருத்தரங்கில் காந்திய தலைவர் அன்னா ஹசாரே கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மதுரைக்கு பல்வேறு பெருமைகள் இருக்கின்றன. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள நகரத்திற்கு வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. மதுரையில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைகை நதி சீரழிந்து கிடக்கிறது. அதனை மீட்கவும், வைகை நதியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காகவும் இங்கு வந்திருக்கிறேன். என் மாநிலமான மராட்டியத்திலும் இதுபோன்று நதி பிரச்சினை இருந்தது. அதனை நாங்கள் திட்டமிட்டு செயல்படுத்தி தீர்வு கண்டோம். அதுபோல், வைகை நதி பிரச்சினையையும் திட்டமிட்டு தீர்வு காண வேண்டும்.
தண்ணீர் பிரச்சினை என்பது நாட்டில் எல்லா மாநிலத்திலும் இருக்கிறது. நாடு முழுவதும் இருக்கும் இந்த பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும். நான் வசிக்கும் கிராமத்திலும் தண்ணீர் பிரச்சினை இருந்தது. நாங்கள் உரிய முறையில் திட்டம் வகுத்து மழை பெய்யும் காலங்களில் அதனை சேமித்து வைத்து தண்ணீரை குறைவாக பயன்படுத்தினோம். எங்கள் கிராமத்தில் 80 சதவீத மக்கள் பசி, பட்டினியால் இருந்தனர். ஆனால் தற்போது நாங்கள் வியாபாரம் செய்யும் அளவிற்கு முன்னேறி இருக்கிறோம். பொருளாதார ரீதியாக நல்ல செழிப்பாக இருக்கிறோம்.
வைகை நதி மட்டுமின்றி மாநிலங்களில் உள்ள அனைத்து நதிகளையும் பாதுகாக்க வேண்டும். ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். அதுபோல், தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு கொடுக்கக் கூடாது. விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டு பானங்கள் குடிக்காமல் மக்களால் உயிர் வாழ முடியும். ஆனால் சோறு இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை உணர வேண்டும்.
விவசாயிகள், விவசாய நிலங்கள் பற்றி அரசுக்கு கவலை இல்லை. விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி மார்ச் மாதம் 23-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப் போகிறோம். இதற்கு பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருக்கிறோம். விவசாயிகள் பிரச்சினைகள் போன்று லோக்பால் சட்டத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்போகிறேன்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியா, ஆசிய அளவில் ஊழலில் 4-வது, 5-வது இடத்தில் இருந்தது. ஆனால் நரேந்திர மோடியின் ஆட்சியில் படிப்படியாக முன்னேறி முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. ஊழலை பொறுத்தமட்டில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிகளுக்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை. இரு ஆட்சியிலும் ஊழல் ஒழிந்ததாகத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.