சென்னையில் நாளை நடைபெறுகிறது அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
சென்னை,
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
கூட்டத்தில், அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி குறித்தும், சென்னையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும், அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந்தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யாரை வேட்பாளராக களம் இறக்குவது? என்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
எனவே, அன்றைய கூட்டத்திலோ, அல்லது அடுத்த சில நாட்களிலோ ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு நேற்று அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.