தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
தென் தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி நேற்று கூறியதாவது:-
தெற்கு வங்க கடலை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் நாளை(இன்று) தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நகரில் அவ்வப்போது தரைக்காற்று வலுவாக வீசக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.