தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவும்முன் அழிக்க கோரிக்கை
கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்த நிலையில் தமிழகத்தில் கொசுக்கள் மீண்டும் தலை தூக்க தொடங்கி விட்டன.
சென்னை,
கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்த நிலையில் தமிழகத்தில் கொசுக்கள் மீண்டும் தலை தூக்க தொடங்கி விட்டன. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கொசுக்களை ஆரம்பத்திலேயே அழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக மக்களை மிகவும் அச்சுறுத்தி வந்த ஒரு நோய் டெங்கு காய்ச்சல். இந்த காய்ச்சலால் தமிழகத்தில் பலர் பாதிக்கப்பட்டு சில உயிரிழப்புகள் நிகழ்ந்தன. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் டெங்கு என்றாலே தமிழக மக்கள் மத்தியில் ஒரு விதமான அச்சம் ஏற்படும் நிலை வந்தது.
பொதுவாக டெங்கு காய்ச்சல் ‘ஏடிஸ்’ என்ற கொசு மூலமாக பரவுகிறது. இந்த கொசு மனிதர்களை பகலில் கடிக்கக் கூடியது ஆகும். தமிழக மக்களை மிகவும் துன்பப்பட வைத்த இந்த கொசுக்களை ஒழிக்க தமிழக அரசும், சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
கொசுக்களை அழிக்கும் முயற்சியின்போது கொசுக்கள் மேலும், மேலும் உற்பத்தி ஆகி கொண்டிருந்ததால் கொசு ஒழிப்பு பணி என்பது அரசுக்கு மிக சவாலாகவே இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் கொசுக்களின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் சற்று குறைந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாநகரங்களில் கொசுக்களின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அதேபோல், பகலில் கடிக்கும் கொசுக்களின் தாக்கமும் அதிகமாக காணப்படுவதால் டெங்கு காய்ச்சல் பரவுமோ? என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கொசுக்களை அழிக்க சில மருந்துகளை தெளித்தாலும், கொசுக்கள் அழியாமல், மீண்டும் கோர தாண்டவம் ஆடுகின்றன. எனவே மேலும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதை தடுத்து ஆரம்பத்திலே அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.