திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களை கற்பழித்தவன் கைது பரபரப்பு தகவல்
சென்னையில் பிரபல ரவுடி அகரம் நாராயணன் பாணியில் திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களின் கற்பை சூறையாடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார்.
முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார். கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்.
காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது பெயர் அறிவழகன் (வயது 27), கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர். பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து கவுரவமாக வாழ்ந்த பட்டதாரியான அறிவழகன் வேலையை உதறிவிட்டு, சென்னைக்கு வந்து திருட்டு தொழிலை தொடங்கியிருக்கிறார்.
சைதாப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, அறிவழகன் சிக்கினார். இவர்மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதால் போலீசார் இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று அடையாறு துணை கமிஷனர் யோகானந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
துணை கமிஷனர் இவரிடம் விசாரித்தபோது அதிரவைக்கும் திடுக்கிடும் தகவல்களை அறிவழகன் வெளியிட்டதாக தெரிகிறது. தான் திருடிய வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களின் கற்பை சூறையாடியதாக கூறினார்.
அறிவழகன் சொன்ன தகவல் உண்மையானதா? என்பதுபற்றி விசாரிக்க துணை கமிஷனர் யோகானந்த் தனி போலீஸ்படை அமைத்தார். இன்ஸ்பெக்டர்கள் வேலு, விஜயகுமார் அடங்கிய 2 தனிப்படையினர் களத்தில் இறங்கி அதிரடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அறிவழகனின் அட்டகாசங்கள் அடுக்கடுக்காக வெளிச்சத்துக்கு வந்தது.
சென்னை வில்லிவாக்கம், அம்பத்தூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் அறிவழகன் வீடுபுகுந்து திருடியபோது, தனியாக இருந்த பெண்களின் கற்பை சூறையாடியதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இவரது காமப்பசிக்கு இரையான பெண்கள் எத்தனை என்று இவரால் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் 50–க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கலாம் என்று அறிவழகன் சொல்கிறாராம்.
கிண்டி அம்பாள்நகர் பகுதியில் ஒரு வீட்டில் திருடியபோது அங்கிருந்த பெண் கூச்சல் போட்டதாகவும், கத்திமுனையில் அவரை மிரட்டி கட்டிப்பிடித்து வாயைப் பொத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட கிளுகிளுப்பில் அந்த பெண்ணை தனது காமப்பசிக்கு இரையாக்கியதாகவும், அந்த சம்பவம் தனக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்ததால் தொடர்ந்து இதுபோல் வீடுபுகுந்து திருடும்போது தனியாக இருக்கும் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக அறிவழகன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா? என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார்.
அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.