டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் விவகாரம்; தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் விவகாரத்தில் தவறான கருத்து பதிவு செய்ததற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2017-11-14 10:33 GMT
சென்னை,

டாஸ்மாக் மதுக்கடைகளை ஊருக்குள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட கோரியும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 1,700 மதுக்கடைகள் மூடப்பட்டன.  ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி மதுக்கடைகள் திறக்கப்பட்டன.  இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி உயர் நீதிமன்றம் கேள்வி கேட்பதாக தமிழக அரசு கூறியது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அதில், தமிழக அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி உயர் நீதிமன்றம் கேள்வி கேட்பதாக தமிழக அரசு கூறியது தவறு.  உத்தரவை நெறிப்படுத்தும்படி மனு செய்து விட்டு உயர் நீதிமன்றத்தினை சுட்டி காட்டுவது தவறு.

டாஸ்மாக் கடைகள் திறக்கும் விவகாரத்தில் தவறான கருத்து பதிவு செய்துள்ளது என கூறி தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்