கருணாநிதி என்னை அடையாளம் கண்டு கொண்டு, எனது கையை பிடித்து வரவேற்றார் - நல்லக்கண்ணு

கருணாநிதி என்னை அடையாளம் கண்டு கொண்டு, எனது கையை பிடித்து வரவேற்றார் என நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

Update: 2017-11-11 16:23 GMT
சென்னை,

சென்னை  கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை  நல்லக்கண்ணு மற்றும் முத்தரசன் சந்தித்து  நலம் விசாரித்தனர். நலம் விசாரித்த பின் நல்லக்கண்ணு செய்தியார்களிடம் கூறியதாவது:

கருணாநிதியை சந்தித்ததில் மனநிறைவு அளிக்கிறது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி என்னை அடையாளம் கண்டு கொண்டு, எனது கையை பிடித்து வரவேற்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்