திருவாரூரில் கனமழை: 60 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் நீரில் மூழ்கின; விவசாயிகளுக்கு பாதிப்பு
திருவாரூரில் இன்று கனமழை பெய்து வருகிறது. இதனால் பாசன நிலங்களில் நீர் தேங்கி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல நீர்நிலைகள் நிரம்பின. வெள்ளத்தினால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
கனமழையினால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் கடந்த ஒரு வாரம் சிரமமடைந்தனர். அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பும் வெளியானது.
இந்நிலையில் திருவாரூரில் இன்று கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து திருவாரூரிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருவாரூர், நன்னிலம், குடவாசல், மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் 60 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பாசன நிலங்களில் நீர்தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.