வங்கி ஏஜெண்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயி மீது தானிப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

திருவண்ணாமலை அருகே வங்கி ஏஜெண்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயி மீது தானிப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2017-11-07 05:14 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ஞானசேகரன்(55).

விவசாயியான இவர் சாத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் விவசாய கடன் திட்டத்தில் டிராக்டர் ஒன்று வாங்கினார்.  7 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கான தவணை தொகையை கடந்த 4 ஆண்டுகளாக செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடும் வறட்சியால் தவணை தொகை செலுத்த முடியாத ஞானசேகரனை வங்கி நிர்வாகம் வாராக்கடன் பட்டியலில் சேர்த்தது.

கடன் தொகையை வசூலிக்கும் பொறுப்பு தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த 4ந்தேதி அந்த நிறுவன ஊழியர்கள் ஞானசேகரனின் டிராக்டரை ஜப்தி செய்ய சென்றுள்ளனர்.  இதனால் ஞானசேரன் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் ஞானசேகரனை பிடித்து தள்ளி விட்டனர் என கூறப்படுகிறது.  இதில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி ஞானசேகரன் அன்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இந்த நிலையில் 5ந்தேதி (அடுத்த நாள்) தானிப்பாடி காவல்நிலையத்தில் விவசாயி ஞானசேகரன் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்