இலங்கை கடற்படையால் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்

Update: 2017-10-17 05:20 GMT
 கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். தற்போது காங்கேசம் துறைமுகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு - மன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்கவிடாமல் விரட்டியடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் படகில் ஏறிய இலங்கை கடற்படையினர், மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி, 2 படகையும் அதில் உள்ள 8 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். 

தற்போது சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 8 மீனவர்களையும் காங்கேசம் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.  அவர்கள் மீது எல்லைதாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து, பிற்பகலுக்குமேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்