அதிமுக ஆட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் - எதிர்க்கட்சிகளுக்கு பழனிசாமி கண்டனம்

அதிமுக ஆட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் எதிர்க்கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2017-10-14 11:55 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ரூ.619.7 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். ரூ4.64 கோடி மதிப்பிலான 24 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பழனிசாமி பேசியதாவது:

அதிமுக ஆட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

டெங்கு காய்ச்சலை சவாலாக எடுத்துக்கொண்டு அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்போது அதன் வலிமையை மக்கள் உணர்வார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

டெங்குவை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அயராது உழைத்து வருகின்றனர். எதிர்கட்சிகள் டெங்கு காய்ச்சலையும் அரசியலாக்கி வருகின்றன.டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு  அவசியம். டெங்கு காய்ச்சலை சவாலக எடுத்துக்கொண்டு அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.81,49 கோடி வறட்சி நிவராணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கப்பட்டதில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். புதுக்கோட்டையில் 21 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.ஏழைகளுக்கு பசுமை வீடுகள் கட்டிகொடுக்கபப்ட்டுள்ளன.

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்