‘நடிகர்கள் சம்பளப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிடாது’-அமைச்சர் கடம்பூர் ராஜூ

‘நடிகர்கள் சம்பளப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிடாது’ என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2017-10-14 06:12 GMT

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இன்று நடைபெறும்    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு  விழாவில் ரூ.647 கோடியில் திட்டப் பணிகளை   முதல்வர்   எடப்பாடி  பழனிசாமி    தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் இன்று தொடங்கிவைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு,

 ‘நடிகர்கள் சம்பளப் பிரச்சனையில்  தமிழக அரசு தலையிடாது. பண்டிகை காலங்களில் எவ்வளவு பெரிய நடிகரின் படம் வந்தாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது. விதிகளை மீறி கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

மேலும் செய்திகள்