ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கு
கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 11 எம்.எல்.ஏ.க்கள் அந்த தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு போட்டனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. சட்டசபை கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் செய்தார். இந்நிலையில் தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் அ.தி.மு.க. கொறடா புகார் செய்தும் கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது உடனடியாக சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சபாநாயகரின் செயல் பாரபட்சமானது. எனவே கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்பட 6 எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்து உள்ளனர்.
அந்த வழக்கு மனுவில் கட்சி கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் விரைவில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.