சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வை எதிர்த்து அரசு பள்ளி மாணவிகள் சாலைமறியல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வை எதிர்த்து அரசு பள்ளி மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2017-09-09 09:08 GMT
சென்னை,

நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 9-வது நாளாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை  நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் நீட் தேர்வை எதிர்த்து அரசு பள்ளி மாணவிகள் சாலைமறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதன்காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள், வேண்டாம், வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம் என முழக்கமிட்டவாறு  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் ஆசிரியைகள், காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்