தமிழகம் முழுவதும் ஜாக்டோ -ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் போராட்டம்
தமிழகம் முழுவதும் ஜாக்டோ -ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை,
ஜாக்டோ-ஜியோ என்னும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்று (7-ந் தேதி) முதல் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் -களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இறுதியாக ஈரோட்டில் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமியுடன் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்று செயல்படுத்த அக்டோபர் 15-ந் தேதி வரை காலம் அவகாசம் தர வேண்டும் என்று எடுத்து கூறப்பட்டது.
இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் முரண்பட்ட கருத்துக்கள் நிலவியது. முதல்வரின் கோரிக்கையை ஏற்று கொள்வதாக ஒரு சில நிர்வாகிகள் தெரிவித்தனர்.சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தனர். இதனால் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 2 ஆக உடைந்தது.
அரசு ஊழியர் சங்கம் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கழகம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் பங்கேற்றன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கினர் . சென்னை,கோவை,திருவாரூரில் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. முதலமைச்சர் எந்த உறுதியும் அளிக்காததால் வேலைநிறுத்தம் நடைபெறுவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பி ஒரு பிரிவினர் கூறி உள்ளனர்.