எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-09-05 06:41 GMT
சென்னை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வருகை தந்து உள்ளனர்.  தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, வேலுமணி வருகை தந்தனர். எடப்பாடி அணியும் ஓ.பி.எஸ். அணியும் இணைந்த பிறகு நடக்கும்  முதல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இதுவாகும். கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது, பொதுக் குழு கூட்டத்தை திறம்பட நடத்துவது, சசிகலா, தின கரனை அ.தி.மு.க.வில் இருந்து விலக்குவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பபடுகிறது. சந்திரபிரபா எம்.எல்.ஏ கூட்டத்தில் கலந்து கொண்டார்.  எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் உட்பட 106  எம்எல்ஏக்கள் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  முதலமைச்சரை மாற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்திய நிலையில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் எடுக்கும்  முடிவுக்கு கட்டுபடுவோம் என  அனைத்து எம்எல்ஏக்களும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

தினகரனை ஆதரிக்கும் 20 எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். அவர்களில் 15 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தனர். அவர்களில் சில எம்.எல்.ஏ.க்கள் அணி தாவி எடப்பாடி நடத்தும் கூட்டத்துக்கு வரக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வரவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் கூட்டத்தை 20 எம்.எல்.ஏ.
க்களும் முழுமையாக புறக்கணித்தனர்.

முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தாமாக முன் வந்து விலக வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் அணியினர் வலியுறுத்தி வரும் நிலையில், எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தில் இத்தகைய தீர்மானம் கொண்டு வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்