ஜாக்டோ - ஜியோவுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை
நாளை மறுநாள் (7-ந் தேதி) தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ-வுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
சென்னை,
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர உத்தரவிட வேண்டும்; மத்திய 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்; அதுவரை இடைக்கால நிவாரணத் தொகையை அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஜேக்டோ ஜியோ என்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு முன் வைத்துள்ளது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜேக்டோ ஜியோ எச்சரித்துள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்டு 22-ந் தேதியன்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் எச்சரிக்கையையும் மீறி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்த கூட்டமைப்பினர் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், ஜேக்டோ ஜியோவை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை பிற்பகல் 3.30 மணிக்கு முடிந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், உதயகுமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
ஜாக்டோ ஜியோ தரப்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், இளங்கோவன் உள்பட 35 நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தை கைவிடுவதற்கு ஜாக்டோ ஜியோவுக்கு அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு சாதகமான பதிலை அளிக்கவில்லை என்பதால் ஜாக்டோ ஜியோ இறங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதுபற்றி விசாரித்தபோது, இந்த பேச்சுவார்த்தை பற்றி முதல்-அமைச்சரிடம் எடுத்துரைப்போம் என்று அமைச்சர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை சம்பந்தமாக ஜக்டோ ஜியோ நிர்வாகிகள் தனியாக கூடி ஆலோசித்து முடிவை அறிக்கையாக வெளியிடுவோம் என்று அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.