மழை வெள்ளம் காரணமாக நெல்லையில் இருந்து மும்பை செல்லும் ரெயில் ரத்து

மழை வெள்ளம் காரணமாக நெல்லையில் இருந்து மும்பை செல்லும் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2017-09-02 15:17 GMT
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

மும்பையில் தொடர்மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் நெல்லையில் இருந்து மும்பை–தாதர் ரெயில் நிலையத்திற்கு நாளை(திங்கட்கிழமை) மதியம் 2.55 மணிக்கு புறப்பட இருந்த நெல்லை–தாதர் விரைவு வண்டி(வ.எண்.11022) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்