திருச்சி ராமஜெயம் கொலை தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ. 2 லட்சம் வெகுமதி: சிபிசிஐடி

திருச்சி ராமஜெயம் கொலை தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ. 2 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2017-09-02 08:07 GMT
சென்னை, 

திருச்சி ராமஜெயம் கொலை தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸ் தெரிவித்துள்ளது.
சென்னை சி.பி.சி.ஐ.டி போலீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகரத்தை சேர்ந்த ராமஜெயம் 29-3-2012-ம் தேதி அதிகாலை நடைபயிற்சிக்காக செல்லும் போது கொலை செய்யப்பட்டார். இதே போல கடந்த ஆண்டு 8-8-2016 சேலத்தில் இருந்து சென்னை வந்த சேலம்-சென்னை விரைவு ரெயில் பார்சல் வேனில் எடுத்து வரப்பட்ட பணத்தில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளையும் தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை விசாரணை செய்து வருகிறது.இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.இந்த வழக்கு குறித்து தொலைபேசி, செல்போன் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பொதுமக்கள் தகவல் தரலாம். அவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.இதுகுறித்த தகவல் தர 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வேண்டிய பெண்கள் : 044-28511600, செல்போன்-வாட்ஸ்அப் எண்கள்: 99400 22422, 99400 33233 ஆகும்.

மேலும் செய்திகள்