மாணவி அனிதா தற்கொலை மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது டிடிவி தினகரன்

மாணவி அனிதா தற்கொலை மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது என டிடிவி தினகரன் கூறிஉள்ளார்.

Update: 2017-09-01 12:48 GMT

சென்னை,

டிடிவி தினகரன் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், நீட் தேர்வை எதிர்த்து போராடியஅன்பு மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை  சென்றுள்ளாரே என்று அனிதாவின் துணிச்சலை எண்ணி மகிழ்ந்திருந்தேன். அவர் இத்தகைய முடிவை எடுப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார். 

மேலும் செய்திகள்