தமிழக அரசு வேகமாக முன்னேறி வருகிறது-முதல்வர் பழனிசாமி சுதந்திர தின உரை

அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு வேகமாக முன்னேறி வருகிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2017-08-15 04:01 GMT
சென்னை

சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைஅச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். சென்னை கோட்டையில் முதல் முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8.30க்கு  தேசிய கொடியை ஏற்றிவைத்து  ,சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரத்திற்காக அரும் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம். விடுதலைப் போராட்ட தியாகிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும்.

அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு வேகமாக முன்னேறி வருகிறது. ரூ.1,114 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது . முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் போரின் போது, தன் சொந்த நகைகளை அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், கொடுத்தவர் ஜெயலலிதா.  உழவர் பாதுகாப்பு திட்டத்தில், இயற்கை மரணமடையும் விவசாயிகளுக்கான நிதி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்திய நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நீராபானம் திட்டம் மூலம், விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயரும்.  தென்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் தொடங்க திட்டம். 1,519 ஏரிகளில் ரூ.100 கோடி செலவில் ஏரிகள் சீரமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருதை பேராசிரியர் தியாகராஜனுக்கு வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி.  துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, திருவண்ணாமலையை சேர்ந்த ப்ரீத்திக்கு வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது : தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, வணிகவரித் துறைக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மாநகராட்சிக்கான விருது திருநெல்வேலி  சிறந்த நகராட்சிக்கான விருது:சத்தியமங்கலம், சிறந்த பேரூராட்சி : பொன்னம்பட்டிக்கும் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விருது வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் பாராட்டு சான்றிதழ் - டாக்டர் கே.நாராயணசாமி, கல்லீரல்துறை தலைவர், சென்னை மருத்துவக்கல்லூரி. வழங்கபட்டது.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது : தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, வணிகவரித் துறைக்கு வழங்கப்பட்டது


மேலும் செய்திகள்