அதிமுக ஒரே கட்சி தான், அது சசிகலா தலைமையிலானது - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

அதிமுக ஒரே கட்சி தான், அது சசிகலா தலைமையிலானது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.

Update: 2017-08-12 09:47 GMT
சென்னை

சென்னை விமான நிலையத்தில்  பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக ஒரே கட்சி தான் ,சசிகலா தான் அதிமுகவின் உண்மையான தலைவர். அதிமுக அணிகள் எல்லாம் கிடையாது. ஒரே ஒரு அதிமுக தான் அது சசிகலா தலைமையில் உள்ள அதிமுக தான்.

தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. தற்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிரத்திலும் தமிழகத்திலும் சிறப்பாகதானே செயல்படுகிறார்.

அகமது படேல் எங்களுடயை எதிரி என்பதால் அவரை குஜராத் ராஜ்யசபா தேர்தலில் தோற்கடிக்க முயற்சித்தோம். வழக்குகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் விரைவில் சிறை செல்வர்.

தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஏன் அதை இப்போதே கொண்டு வரட்டுமே, அதென்ன தேவைப்பட்டால்?

எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை கூற வேண்டுமானால் நான் தமிழகத்தில் ஒரு மாதம் தங்கியிருந்தால் தான் கூற முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்