அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவு முதல் இடத்தை பிடித்தது
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவு முதல் இடத்தை பிடித்துள்ளது.
சென்னை
தமிழ்நாட்டில் 518 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 339 இடங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் தான் விண்ணப்பித்து உள்ளனர். என்ஜினீயரிங் படிக்கும் மோகம் மாணவ-மாணவிகளிடம் குறைந்து வருவதால் விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான பொது கலந்தாய்வு கடந்த மாதம் 23-ந்தேதி முதல் நடந்து வருகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தும் வராத மாணவ-மாணவிகள் சதவீதம் அதிகரித்து வருகிறது.
தற்போது வரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 900 பேர் வரவழைக்கப்பட்டனர். இதில் 35 சதவீதம் பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 74 ஆயிரத்து 800 பேர் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்ந்து எடுத்தனர்.
முதலில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவை அதிக மாணவர்கள் விரும்பி எடுத்தனர். மெக்கானிக்கல் 2-வது இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அது மாறிவிட்டது. மெக்கானிக்கல் பிரிவு முதல் இடத்தை பிடித்தது. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவு 2-வது இடத்துக்கு சென்றுவிட்டது. கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-வது இடத்தை பெற்று உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் பொது கலந்தாய்வு 11-ந்தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.