மாணவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வழக்கு; விசாரணை தள்ளிவைப்பு
நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக மாணவர்களை ஒன்று திரட்டியதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க சேலம் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து வளர்மதியின் தந்தை மாதையன், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக உள்துறை செயலாளர், சேலம் போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 21–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.