சென்னை கோபாலபுரத்தில் உள்ள உணவு விடுதியில் தீ விபத்து

சென்னை கோபாலபுரம் திரு.வி.க. சாலையில் முகமது அலி என்பவருக்கு சொந்தமான உணவு விடுதி ஒன்று உள்ளது.

Update: 2017-08-07 22:15 GMT

சென்னை,

இந்த உணவு விடுதி தரைத்தளத்துடன் சேர்த்து 3 அடுக்கு மாடி கொண்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

நேற்று அதிகாலை உணவு விடுதியில் இருந்த மைக்ரோ ஓவனில் தீப்பிடித்தது. இதை பார்த்த ஊழியர் ஒருவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் உணவு விடுதியின் தரைத்தளம் முழுவதிலும் தீப்பிடித்தது. தகவலின் பேரில் வேளச்சேரி தீயணைப்பு நிலைய அலுவலர் ராமதாஸ் தலைமையில் தேனாம்பேட்டையில் இருந்து 6–க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து உணவு விடுதியில் பற்றி எரிந்த தீயை சுமார் 30 நிமிடங்கள் போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் உணவு விடுதியின் தரைத்தளத்தில் இருந்த சுமார் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்