சென்னையில் 10-ந்தேதி தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஆர்ப்பாட்டம்

சென்னையில் 10-ந்தேதி எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

Update: 2017-08-04 06:18 GMT
சென்னை

எடப்பாடி பழனிசாமி அரசை எதிர்த்து போராட்டத்தையும் ஓ.பன் னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சினையை முன்வைத்து தமிழகம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் 10-ந்தேதி எடப்பாடி பழனிசாமி  அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இதற்காக தமிழகம் முழுவதுமுள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்து உள்ளார்.  ஒரு பக்கம் தினகரனால் நெருக்கடி, இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ். அணியால் தலைவலி என எடப்பாடி அணியினர் கடும் சவாலை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அ.தி. மு.க. அணிகள் இணைப்பு என்பதும்  இனி நடைபெற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்