சீனாவில் பணியாற்றும் தமிழக கணித ஆசிரியருக்கு விருது அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

ஐசக் தேவகுமார் கடந்த 2 ஆண்டுகளாக சீனாவில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

Update: 2017-08-01 18:45 GMT
சென்னை,

ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் ப.ஐசக். அவரது மகன் ஐசக் தேவகுமார் கடந்த 2 ஆண்டுகளாக சீனாவில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் சீன அரசு சிறந்த ஆசிரியர் விருதை வழங்கியது. இந்த விருதைப் பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்ததாக, ஐசக் தேவகுமாருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துச் சான்றை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்