தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2017-07-17 23:21 GMT
சென்னை

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இருப்பினும்
சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. வங்காள விரிகுடா கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது ஒடிசா நோக்கி நகரும் என்பதால், தமிழகத்திற்கு பலன் இல்லை” என்றனர்.

நேற்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தேவலா, வால்பாறை, சின்னக்கலாறு பகுதிகளில் அதிகபட்சமாக தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்