மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கூடாது மத்திய மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என மத்திய நீர்பாசன துறை மந்திரி உமாபாரதிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
மத்திய நீர்பாசன துறை மந்திரி உமாபாரதிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேகதாது பல் நோக்கு திடடத்தின் (குடிநீர் மற்றும் மின்சாரம்) தொழில்நுட்ப அனுமதிக்காக கர்நாடக அரசு மத்திய நீர்பாசன குழுவை தொடர்பு கொண்டுள்ளதாக மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரானது. ஏற்கனவே கர்நாடகாவின் மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதங்கள்
எழுதப்பட்டுள்ளன.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக விதி மீறலில் ஈடுபட்டுள்ளது துரதிருஷ்டவசமானது. எனவே மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமலும், எந்தவித அனுமதியும் பெறாமலும் ஒப்புதல் அளிக்க கூடாது. மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதல் இன்றி அனுமதி வழங்க கூடாது. பொருளாதார ரீதியிலேயோ, தொழில்நுட்ப ரீதியிலேயோ எந்தவித அனுமதியும் அளிக்க கூடாது. காவிரி விவகாரம் முடியும் வரை கர்நாடக அரசின் எந்தவித திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.