தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்யச்சொன்னதாக எந்த தகவலும் இல்லை முதல்-அமைச்சர் பழனிசாமி பேட்டி

தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்யச்சொன்னதாக எந்த தகவலும் இல்லை என- முதல்-அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-18 14:29 GMT
திருச்சி,

திருச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியார்களிடம் கூறியதாவது:

தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்யச்சொன்னதாக எந்த தகவலும் இல்லை. 1519 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றன. 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்