எதிர்க்கட்சிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

எதிர்க்கட்சிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-06-15 18:45 GMT
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்துவதற்கும், போட்டியின்றி தேர்ந்தெடுப்பதற்கும் பா.ஜ.க. முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பதை விடவும் பா.ஜ.க.வை எதிர்த்து அனைத்து கட்சிகளையும் அணி திரட்டுவது என்பதே முதன்மையானது. அதற்கு எதிர்க்கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே சரியாக இருக்கும்.

அதை விடுத்து பா.ஜ.க. வேட்பாளரை ஏற்றுக்கொண்டால் அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதாகவே பொருள்படும். எனவே, பா.ஜ.க.வின் சதிவலையில் காங்கிரசோ, இடதுசாரிகளோ, பிற எதிர்க்கட்சிகளோ சிக்கிக் கொள்ளக்கூடாது என வலியுறுத்துகிறோம். பொது வேட்பாளர், கருத்து ஒற்றுமை என்பதெல்லாம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைப்பதற்கு பா.ஜ.க. கையாளும் தந்திரங்கள்தான். இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்