காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு எதிராக பிடிவாரண்டு அரசு வக்கீல் கேட்டுக்கொண்டதால், நிறுத்தி வைத்து ஐகோர்ட்டு உத்தரவு
காஞ்சீபுரம் கலெக்டர் உள்ளிட்டோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.
சென்னை,
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமலும், விசாரணைக்கு நேரில் ஆஜராகாமலும் இருந்ததால், எரிசக்தித்துறை செயலாளர், காஞ்சீபுரம் கலெக்டர் உள்ளிட்டோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.
ஆனால், சிறப்பு அரசு பிளீடர் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, இந்த பிடிவாரண்டை நீதிபதி நிறுத்தி வைத்துள்ளார்.
விவசாயம் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரகுபதி, கண்ணபிரான் உள்பட 12 பேர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காஞ்சீபுரம் மாவட்டம் புகழூரில் இருந்து ஒட்டியம்பாக்கம் வரை உயர்மின் அழுத்த கோபுரப்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த மின்பாதை கலிவந்தப்பட்டு கிராமம் முதல் ஒட்டியம்பாக்கம் வரை 24 கி.மீ. தூரத்துக்கு எங்களது கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்கிறது. இதற்காக விவசாய நிலத்தில் 20 மீட்டர் ஆழத்துக்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இந்த மின்பாதை விப்ரோ, சத்யம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீரும், விவசாயமும் கடுமையாக விவசாயமும் பாதிக்கப்படும். மின் காந்த கதிர் வீச்சினால், மனிதர்கள், கால்நடைகள் உடல் நலத்துக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்தப்பாதை அமைக்க தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
விவசாயிகளுக்கு இழப்பீடு
இந்த வழக்கை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உயர் மின் அழுத்தப்பாதை அமைக்கும் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால், இழப்பீடும் வழங்கப்படவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து எரிசக்தித் துறை செயலாளர் விக்ரம் கபூர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோரை நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின்னரும், அதிகாரிகள் நேரில் ஆஜராகவில்லை.
பிடிவாரண்டு
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும், எரிசக்தி துறைச் செயலாளர், காஞ்சீபுரம் கலெக்டர் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர், எரிசக்தி துறை செயலாளர், காஞ்சீபுரம் கலெக்டர் உள்பட 4 அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிபதி முன்பு அரசு சிறப்பு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ஐகோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் உடனே செயல்படுத்துவார்கள் என்றும், அதிகாரிகளுக்கு எதிரான பிடிவாண்டை திரும்பப் பெறவேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிடிவாரண்டை நிறுத்தி வைத்து, விசாரணையை வருகிற 23–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.