சென்னையில் 9-ந் தேதி முதல் 32 நாட்கள் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் அய்யாக்கண்ணு பேட்டி
விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 9-ந் தேதி முதல் 32 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அய்யாக்கண்ணு கூறினார்.
தஞ்சாவூர்,
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வறட்சியால் 1 கோடி ஏக்கரில் பயிர்கள் கருகிவிட்டன. ஒரு ஏக்கரில் கூட சாகுபடி செய்யப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு பலமுறை உத்தரவு பிறப்பித்தும் காவிரி நீரை தர கர்நாடக அரசு மறுக்கிறது. இதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலையை கொடுக்க அரசு மறுக்கிறது. தேர்தல் வரும்போது நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்று சொல்வார்கள். தேர்தல் முடிந்துவிட்டால் அடிமைகளாக நினைக்கின்றனர். டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்தினோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களை சந்தித்தபோது, பிரதமருடன் பேசி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
32 நாட்கள் ஆர்ப்பாட்டம்
60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதையும் செய்வதாக சொன்னார். ஆனால் இதுவரை அவர் எதையும் செய்யவில்லை. இதனால் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 9-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி வரை 32 நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
அதன்பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் 100 நாட்களுக்கு வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கரும்பு நிலுவைத்தொகை
கரும்புக்கான நிலுவைத்தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். எரிவாயு எடுக்கமாட்டோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளிப்பதுடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஜனநாயக நாட்டில் உரிமைகளுக்காக போராட்டம் நடத்துவது எங்களது கடமை. வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.