காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பரபரப்பு புகார் ‘சமூக வலைதளங்களில் ஆபாச தகவல்களை பரப்புகிறார்கள்’

தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் ஜோதிமணி. இவர் நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ‘வாட்ஸ்–அப் போன்ற சமூக வலைதளங்களில் தன்னை பற்றி ஆபாச தகவல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல்

Update: 2017-01-06 19:33 GMT
சென்னை, 

தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் ஜோதிமணி. இவர் நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ‘வாட்ஸ்–அப் போன்ற சமூக வலைதளங்களில் தன்னை பற்றி ஆபாச தகவல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், செல்போனிலும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறார்கள் என்றும், பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் குரல் போல பெண் ஒருவர் செல்போனில் பேசி மிரட்டுவதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

அவருடைய புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்