அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா முதல்-அமைச்சராக பெருகிவரும் ஆதரவு
சென்னை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா முதல்- அமைச்சராக வேண்டும் என்று அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்களும் மக்களவை துணை சாபாநாயகர் தம்பி துரை உள்பட பல்வேறு நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.
சென்னை
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா முதல்- அமைச்சராக வேண்டும் என்று அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்களும் மக்களவை துணை சாபாநாயகர் தம்பி துரை உள்பட பல்வேறு நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் முதல்- அமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அமைச்சர்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது மரியாதை வைத்துள்ளார்கள். ஆனால் தலைவர்கள், கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்டிமென்டாக சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதியும் சசிகலா முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ஜெயலலிதாவோடு நீண்ட காலம் உடன் இருந்து எல்லா நிலைகளிலும் பணியாற்றியவர்.
இந்த இக்கட்டான நேரத்தில் கட்சியை கட்டுப்பாட்டுடன் வழி நடத்தும் தகுதி பெற்றவர் அவர். பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளராக சம்மதம் தெரிவித்து பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
கட்சி பதவி மட்டுமின்றி அவர் முதல்- அமைச்சராகவும் பொறுப்பேற்பதை அனைவரும் விரும்புகிறோம் என்றார்.