மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து 5-வது நாளாக அரசு டாக்டர்கள் போராட்டம் 200 அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து 5-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் 200 அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Update: 2023-10-06 20:30 GMT


மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த வண்டியூரை சேர்ந்த கர்ப்பிணி பிரசவத்திற்கு பின்னர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சியின் சுகாதார அலுவலர், அரசு ஆஸ்பத்திக்கு வந்து அங்குள்ள டாக்டர்களின் அத்துமீறி அங்குள்ள ஆவணங்களை திருத்தி உள்ளார். இதனால், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 5-வது நாளாக நேற்றும் அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். மேலும், அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை புறக்கணித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 40 நோயாளிகளுக்கு அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் நடக்கிறது. டாக்டர்களின் போராட்டத்தால், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், கடந்த 5 தினங்களாக 200 அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அறுவை சிகிச்சைக்காக பல நாட்கள் காத்திருந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மதுரையில் நடந்துவந்த இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்களின் ஆதரவு தெரிவித்து நேற்று முதல் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்