வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
மாணவிக்கு பாலியல் ெதால்லை அளித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ராஜபாளையம் மலையடிபட்டி தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன் என்ற சுந்தர் (வயது 27). தொழிலாளி. கடந்த 1.11.2020-ந் தேதியன்று 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் விசாரித்து சுந்தருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.