பாலியல் வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டு சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

பாலியல் வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

Update: 2023-01-31 21:07 GMT


மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். திருமணமாகாமல் இருந்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சிறுவர்களான அக்காள் மற்றும் தம்பியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் இந்த வழக்கை விசாரித்த மதுரை போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி கிருபாகரன், குற்றம் சுமத்தப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக அரசு தரப்பில் வழங்கவும், இழப்பீட்டை அந்த சிறுவர்களின் கல்விக்கு பயன்படும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்