நவதிருப்பதி கோவில்களுக்கு 20 திருக்குடைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி கோவில்களுக்கு திருக்குடைகள் வழங்கப்பட்டன.

Update: 2023-10-06 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி பெருமாள் கோவில்களில் விழாக்காலங்களில் சுவாமி வீதி உலாவின்போது பயன்படுத்தும் வகையில், திருக்குடைகள் வழங்கும் விழா, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் நேற்று நடந்தது. தமிழ்நாடு விஸ்வ ஹிந்து வித்யாகேந்திரா நிறுவன தலைவர் வேதாந்தம் தலைமை தாங்கினார். விஸ்வ ஹிந்து வித்யாகேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி நவதிருப்பதி பெருமாள் கோவில்களுக்கான 20 திருக்குடைகளை ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயரிடம் வழங்கினார். அதற்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டனிடம் வழங்கினர்.

இன்று (சனிக்கிழமை) காலையில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் உள்ளிட்ட மற்ற கோவில்களுக்கு திருக்குடைகளை ஒப்படைக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்