கோவை தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மோசடி

கோவை தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மோசடி

Update: 2023-05-15 18:45 GMT

கணபதி

கோவை தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவனம்

ஈரோடு மாவட்டம் கே.என்.கே. ரோடு பகுதியை சேர்ந்தவர் வள்ளியப்பன் (வயது 63). இவர் கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோ மொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இங்கு சமீபத்தில் கணக்கு தணிக்கை நடைபெற்றது. இதில் ரூ.20 லட்சத்திற்கு பண மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளியப்பன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பண மோசடி

போலீஸ் விசாரணையில் அந்த தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்த ரத்தினபுரியை சேர்ந்த சாந்து முகமது (42) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்யும் தொகையை ஏஜென்சி கணக்கில் வரவு வைக்காமல் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சாந்து முகமதுவை ரத்தினபுரி போலீசார் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இந்த மோசடிக்கு வேறு யாரும் உடந்தையா? மோசடி செய்த பணத்தை எங்கு வைத்து உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்